வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரர்கள் வரை சேர்க்கும் வகையில் வங்கிகள் சட்ட சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மொத்தமாக 19 சீர்திருத்தங்கள் இந்த மசோதாவில் செய்யப்பட்டுள்ளன.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
வங்கி திருத்த மசோதா வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதுடன் வங்கிகளின் நிர்வாகத்தையும் மேம்படுத்தும் என்றும், முதலீட்டாளர்களின் முதலீடுகளுக்கு பாதுகாப்பு வழங்கும் என்றும் நிர்மலா சீதாராமன் தமது உரையில் தெரிவித்தார்.