விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வெள்ளநீர் சூழ்ந்ததால அங்குநிறுத்தி வைக்கப்பட்ட கார் மற்றும் சேமித்து வைக்கப்பட்ட பல டன் எடை கொண்ட தானியங்கள் நீரில் நனைந்து சேதம் அடைந்தன.
மேலும்,ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மதில் சுவரும் இடிந்து விழுந்தது.
வெள்ளத்தின் தீவிரம் குறைந்ததால் அரகண்டநல்லூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், உறவினர்கள் வீடுகளுக்கு செல்வதற்கு உடைமைகளுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் , கடலூர் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர்.