சென்னையில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 825 பேருந்து நிழற்குடைகளை சீரமைத்து பராமரிக்க மாநகராட்சி டெண்டர் கோரியது.
418 கிலோமீட்டர் நீளத்துக்கு 488 பேருந்து தட சாலைகளில் 1,265 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இதில் பராமரிப்பு இல்லாத மேற்கூரைகள், உடைந்த நிலையில் உள்ள இருக்கைகள் போன்றவற்றை சீரமைப்பதற்கான பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
2 அடி உயரத்தில் துருபிடிக்காத எக்கு-வால் உருவான இருக்கை, டிஜிட்டல் விளம்பர பலகைகள் அமைக்கப்பட உள்ளதாகவும், ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனம் பேருந்து நிழற்குடையை 8 ஆண்டுகளுக்கு பராமரிக்கும்.