கோவையில் 126 கோடி ரூபாய் மதிப்பில் தங்க நகை தொழில் வளாகம் அமைத்துத்தரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
அனுப்பர்பாளையத்தில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 தளங்களுடன் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிய பின்னர் இவர் இதனை தெரிவித்தார்.
கோவையில் மேலும் ஒரு ஐடி பூங்கா, ஆயிரத்து 848 கோடி ரூபாய் மதிப்பில் விமான நிலைய விரிவாக்கம், யானை புகாத நவீன பாதுகாப்பு வேலிகளுடன் கூடிய ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற நிலையை மாற்றி தெற்கை நாங்கள் வளர்த்திருக்கிறோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.