செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

கல்லூரி வளாகத்துக்குள் தேங்கியுள்ள மழைநீர்.. அதிகாரிகள் சொல்லும் காரணம் என்ன..?

Oct 20, 2024 07:21:08 PM

சென்னை பூந்தமல்லியை அடுத்த தண்டலம் பகுதியில், கிருஷ்ணா கால்வாய்க்குச் செல்லும் நீர்வழிப்பாதை திடீரென அடைக்கப்பட்டிருப்பதால், விஜயசாந்தி குடியிருப்பு வளாகம், VGP தொழில்துறை வளாகம், தண்டலம் சவிதா மருத்துவக் கல்லூரி வளாகம் ஆகியவற்றில் மழை நீர் தேங்கி நிற்பதால், பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கிருஷ்ணா கால்வாய் திட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, குடிநீர் ஆதாரமாக விளங்கும் கிருஷ்ணா கால்வாயில் கழிவு நீர் கலப்பதாக, நாளிதழ் செய்தியின் அடிப்படையில், மழைநீர் வடிகால் நீர்வழிப்பாதையை அடைத்ததாக கூறினர்.

மேலும், சவிதா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படாமல் இருப்பதாகவும், நீர் இறைக்கும் மோட்டார்களை பயன்படுத்தி மழைநீர் வெளியேற்ற ஆட்சேபனை இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பேசிய, சவீதா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தினர், கடந்த 30 ஆண்டுகளாக இந்த மழைநீர் வடிகால் நீர்வழிப்பாதை உள்ளதாக கூறினர். செட்டிப்பேடு கிராம பகுதியிலும், விஜயசாந்தி குடியிருப்பு வளாகத்தில் போதிய கழிவுநீர் கட்டமைப்பு இல்லையென்றும், அவர்கள் தெரிவித்தனர்.

சவீதா மருத்துவக்கல்லூரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் நல்ல நிலையில் செயல்படுவதாகவும், தங்கள் வளாகத்திற்குள் ஆய்விற்கு வராமலேயே, நீர்வழித்தடத்தை அடைத்துள்ளதாகவும், சவீதா கல்வி குழும நிர்வாகத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும், மழைநீர் வடிகாலை கிருஷ்ணா கால்வாயுடன் இணைக்க சவீதா கல்வி குழுமத்தினர் கடிதம் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்த நிலையில், கடந்த வாரமே கடிதம் கொடுத்துவிட்டதாகவும், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என சவீதா மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


Advertisement
பா.ஜ.க. தமிழுக்கு எதிரானது போல் சித்தரிக்க தி.மு.க. முயற்சி - மத்திய அமைச்சர் எல்.முருகன்
ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலத்தில் அரிப்பு.. ஆபத்தான முறையில் மக்கள் பயணம்
கூட்டுறவு வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு.. போலீசிடம் வசமாக சிக்கிய திருடர்கள்
'ஸ்ப்ளெண்டர்' பைக்கை குறிவைத்து திருட்டு.. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கைவரிசை
சென்னையில் போதைப் பொருள் விற்பனை செய்ததாக தம்பதி உட்பட 6 பேர் கைது
ஏரியில் மூழ்கி 3 பேர் பலி.. விடுமுறையையொட்டி நீச்சல் பழகச் சென்றபோது சோகம்
ஆசிய போட்டிகளில் இந்தியா தங்கம் வெல்லாதது வருத்தம் அளிக்கிறது - அன்புமணி ராமதாஸ்
சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து.. ஏர் பலூன் வெளியான போதிலும் பெண் உயிரிழப்பு..!
அரக்கோணம் அருகே வீடு புகுந்து திருட முயன்றதாக தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு
பணி நேரத்தில் மயங்கி விழுந்து ஒப்பந்த தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு

Advertisement
Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நீட் தேர்வில் ஜெயிக்கனுமில்ல.. மாணவர்களை அடித்த பயிற்சியாளர்..! மாணவி மீது செருப்பு வீச்சு கொடுமை

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?


Advertisement