சாதிக்கொரு மாவட்டம், அமைச்சர் என பிரித்தாளுவது திமுகதான் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையார் பகுதியில் நடைபெற்ற மத்திய பட்ஜெட் விளக்கக் கூட்டத்தில் பேசிய அவர்,
ஒருவரின் சாதியை தெரிந்து கொள்வதில் என்ன பெருமை எனக் கேட்கும் கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிட்டது ஏன்? என கேள்வி எழுப்பினார்.