இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் 2026-ல் இரண்டடுக்கு மெட்ரோ ரயில் பாலம் சென்னையில் அமைய உள்ளது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் 116 கிலோ மீட்டர் தொலைவுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாதவரம் முதல் சோளிங்கநல்லூர் வரை செல்லும் 4ஆவது வழித்தடமும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை செல்லும் 5ஆவது வழித்தடமும் ஆழ்வார்திருநகர், ஆலப்பாக்கம், வளசரவாக்கம், காரம்பாக்கம் வழியாக செல்கிறது.
இந்த வழித்தடத்தில் 4 ரயில் நிலையங்களுடன் 4 கிலோமீட்டர் தொலைவிற்கு இரண்டடுக்கு மெட்ரோ பாலம் அமைய உள்ளது.
தரை மட்டத்திலிருந்து 50 அடி உயரத்திற்கு நான்காம் வழித்தட பாலமும், 70 அடி உயரத்தில் ஐந்தாம் வழித்தட பாலமும் ஒன்றின் மேல் ஒன்றாக ஒரே தூணில் அமைகின்றன.