சென்னை, வளசரவாக்கத்தில் செயல்படும் தாயார் மல்டி ஸ்பெஷாலிட்டி தனியார்மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் இளங்கோவன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில், மருத்துவமனை உரிமையாளர் சரவணன் சித்த மருத்துவம் படித்துவிட்டு, அலோபதி மருத்துவம் பார்த்ததும், ரஷ்யாவில் மருத்துவம் பயின்ற அகஸ்டின் என்பவர் இந்தியாவில் சிகிச்சை அளிப்பதற்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் போலி சான்றிதழ் கொடுத்து மருத்துவம் பார்த்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், சித்த மருத்துவரான பரதன் லைசென்சை முறைப்படி புதுப்பிக்காததுடன், அலோபதி மருத்துவமும் பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
3 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், சரவணனை கைது செய்தபோது அவரது மனைவி கதறி அழுதபடி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.