நடைபாதை போன்ற பொது இடங்களில் ஆக்கிரமிப்பு நடந்தால், முதலில் அந்த வார்டு கவுன்சிலர் தான் கைது செய்யப்படுவார் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அம்மாநிலத்தில் ஆக்கிரமிப்பு புகார்கள் அதிகரித்ததால் உடனடியாக அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்ட மம்தா, அது தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
அதில் பேசிய அவர், பிழைப்புக்காக ஏழைகள் பொது இடத்தில் கடை போட்ட காலம் மாறி, ஆக்கிரமிப்புகள் பெரிய அளவில் தொழிலாக வளர்ந்துள்ளதாக கூறினார்.
அதிகாரிகள், போலீசார், அரசியல்வாதிகளுக்கு தெரியாமல் எந்த ஆக்கிரமிப்பும் நடக்க முடியாது என குறிப்பிட்ட மம்தா, இந்த விஷயத்தில் கட்சி பேதம் பார்க்கப்படுவதில்லை, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுதான் என விமர்சித்தார்.