மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்ற அடிப்படையில் 38 பள்ளிகளில் ரோபோடிக்ஸ் ஆய்வகங்கள் மற்றும் பல்வகை திறன் பூங்காக்கள் உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாட்டின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்விச் செலவினை அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விளக்கக் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்களை மாணவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க உள்துறை உட்பட 6 துறைகளை இணைத்து குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.