புதுச்சேரியில் அரசு ஏலம் மூலம் 95 சாராயக்கடைகளுடன் 55 கள்ளுக்கடைகளும் நடத்தப்படுவதால் கள்ளச்சாராயம் விற்க வாய்ப்பே இல்லை என்று அம்மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
புதுச்சேரியில் கல்லூரி ஒன்றின் நிகழ்ச்சியில் பேட்டியளித்த அவர், தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதை அந்த மாநில அரசு தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.