ஆந்திர மாநிலம் பங்காரம்மாபேட்டையில் யூடியூப் பார்த்து மனைவியை கொலை செய்த சி.ஆர்.பி.எப் வீரரை போலீசார் கைது செய்தனர். விசாகப்பட்டினத்தில் பணியாற்றி வரும் ஜெகதீஷ், அனுஷா தம்பதிக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் திருமணத்திற்கு முன்பு அனுஷா அதே கிராமத்தைச் சேர்ந்த பிரசாத் என்பவரை காதலித்ததாகவும், அதுகுறித்து தெரிந்ததால் சந்தேகம் அடைந்த ஜெகதீஷ், தடயம் இல்லாமல் கொலை செய்வது எப்படி என யூடியூப்பில் பார்த்து நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி மனைவியை கொன்றதாகவும் தெரிகிறது.
காதலன் தனக்கு தொல்லை தருவதால் தற்கொலை செய்துகொள்வதாக அனுஷா போனில் இருந்து மெசேஜ் வந்ததால் அவரது குடும்பத்தினர் பிரசாத் வீட்டிற்கு சென்று தாக்க முற்பட்டனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் அனுஷாவின் போனை சோதனை செய்ததில் பிரசாத்துக்கும் அனுஷாவுக்கும் ஓராண்டாக எந்த தொடர்பும் இல்லை என்பதை உறுதி செய்தனர்.
விசாரணையில் அனுஷாவை கொலை செய்தபின் ஏற்கனவே தன் செல்போனில் டைப் செய்து வைத்திருந்த மெசேஜை அனுஷா போனில் காப்பி பேஸ்ட் செய்து ஒரே நேரத்தில் தந்தை, சகோதரர், நண்பன் மற்றும் தமக்கு அனுப்பியதை ஜெகதீஷ் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.