சென்னை, தியாகராய நகரில் கோயில் வாசலில் படுத்திருந்த ஆதரவற்ற 85 வயது மூதாட்டியிடம் அத்துமீறலில் ஈடுபட்டு தப்பி ஓடிய போதை இளைஞரை அப்பகுதி மக்கள் தேடிப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
நள்ளிரவில் மூதாட்டியின் அழுகுரல் சத்தம் கேட்டதால் குடியிருப்புவாசிகள் வந்து பார்த்தபோது முகத்தில் கீறல்களுடன் ரத்தம் வழிந்தபடி அவர் இருந்ததாக கூறப்படுகிறது.
மதுபோதையில் வந்த இளைஞர் ஒருவர் தன் மீது ஏறி அமர்ந்து கழுத்தை நெரித்ததாகவும், உடல் முழுவதும் கடித்து குதறியதாகவும் மூதாட்டி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவர் சொன்ன அடையாளங்களை வைத்து வீடு வீடாக தேடிய குடியிருப்புவாசிகள் ஓட்டல் ஒன்றில் வேலை பார்க்கும் ரமேஷ் என்ற இளைஞரை பிடித்துள்ளனர்.
மூதாட்டி அடையாளம் காட்டியதையடுத்து அவர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தேனாம்பேட்டை மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.