சென்னை அம்பத்தூரில் திருமண மண்டப வாசலில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளில் இருந்த தீ பட்டு, அருகிலிருந்த விளையாட்டுப் பொருட்கள் குடோன் தீப்பற்றி எரிந்தது.
யுவராஜ் என்பவருக்குச் சொந்தமான அந்த குடோனில் பெரும்பாலும் ரப்பர் பொருட்களாக இருந்ததால், தீயை அணைப்பது தீயணைப்பு வீரர்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது.
தீ பற்றிய கடை பிரதான சாலையோரம் இருந்ததால், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளுக்கும் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. 3 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்