கேரளாவில் தனது யூடியூபை பிரபலப்படுத்துவதற்காக காரை நீச்சல் குளமாக மாற்றி ஓட்டிய யூடியூபர் மீது போக்குவரத்து விதிகளை மீறியதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளியான மலையாள திரைப்படமான ஆவேசத்தில் காரை நீச்சல் குளமாக மாற்றியது போன்று யூடியூபரான சஞ்சும் என்பவர் தனது காரை மாற்றி சாலையில் ஓட்டிச் சென்றவாறு வீடியோ வெளியிட்டார்.
ஒரு கட்டத்தில் தண்ணீர் காரின் என்ஜினுக்குள் புகவே, சாலையில் தண்ணீரை கொட்டியதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.