இதுவரை செங்கடல் வழியாகச் சென்ற இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாட்டு சரக்கு கப்பல்கள் மீது மட்டும் தாக்குதல் நடத்திவந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள், இனி இஸ்ரேல் நாட்டு துறைமுகங்களுக்கு செல்லும் அனைத்து நாட்டு கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
ஐரோப்பாவிலிருந்து சூயஸ் கால்வாய் வழியாக ஆசியாவிற்கு வரும் சரக்கு கப்பல்கள், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திவரும் தாக்குதல்களால், கூடுதலாக 7000 கிலோமீட்டர் தொலைவு ஆப்ரிக்காவை சுற்றி வந்து ஆசியாவை அடையவேண்டியுள்ளது.
இதனால் கப்பல் போக்குவரத்து செலவுகள் கணிசமாக அதிகரித்து உலகளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.