சென்னை கொருக்குப்பேட்டையில் பிசியோதெரப்பி 3-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு ஆன்லைன் சூதாட்டம் காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
லாரி டிங்கரின் பணியாளர் முனுசாமியின் மகனான தனுஷ், பணியில் இருந்த தமது தந்தையை நேற்று மாலை செல்பேசியில் தொடர்பு கொண்டு ஆன்லைன் தொழில செய்தவற்காக 24 ஆயிரம் ரூபாய் கேட்டதாகவும், தம்மிடம் அவ்வளவு தொகை இல்லை என்று கூறி முனுசாமி நாலாயிரம் ரூபாயை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
அதன் பின் நீண்ட நேரமாக தனுஷை காணவில்லை என்று கூறி அவரது தாயார் வீட்டின் முதல் தளத்தில் இருந்த தனுஷின் அறைக்கு சென்று பார்த்தபோது, உள்ளே தனுஷ் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகவும் அவரது தங்கை தெரிவித்தார்.
முதல் கட்ட விசாரணையில், ஆன்லைன் ரம்மி செயலி மூலம் அதிக கடனானதால் தனுஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.