தெலங்கானாவில் பரப்புரை செய்துவிட்டு சென்னை திரும்பிய தமிழிசை சௌந்தரராஜனிடம், ஆளுநராக இருந்துவிட்டு, அரசியல்வாதியாக பிரச்சாரத்தில் ஈடுபடும்போது மக்களின் வரவேற்பு எப்படி இருந்தது என்று கேள்வி எழுப்பியபோது, அங்குள்ள மக்கள் இப்போதும் தன்னை மன கவர்னர் அதாவது தங்களது மனதில் உள்ள கவர்னர் என்றே சொல்வதாக பதிலளித்தார்.
மேலும் பிரதமர் மோடியே பிரதமராக வேண்டும் என்று பா.ஜ.காவோ, தேசிய ஜனநாயகக் கூட்டணியோ சொல்லவில்லை நாட்டில் உள்ள 70 சதவீத மக்கள் சொல்வதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.