வணிகத்திற்கு பயன்படுத்தும் திமிங்கல இனங்களின் பட்டியலில் துடுப்பு திமிங்கலத்தையும் சேர்க்க ஜப்பான் அரசு அனுமதி அளித்துள்ளது.
ஏற்கனவே மூன்று வகையான சிறிய திமிலங்களை வேட்டையாட அனுமதிக்கப்பட்ட நிலையில், அதனை குறைத்துவிட்டு துடுப்பு திமிங்கலங்களை கூடுதலாக வேட்டையாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு சர்வதேச திமிங்கல ஆணையத்தில் இருந்து விலகிய பிறகு, தமது பிராந்திய கடல் பகுதியில் வணிக ரீதியான திமிங்கல வேட்டையை ஜப்பான் மீண்டும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.