டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க், மின்சார வாகனங்கள் உற்பத்தியில் உலகில் முன்னணி வகிக்கும் சீனாவுக்கு முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சீனாவில் உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்த உள்ள எலன் மஸ்க் கார்களை முழுவதுமாக தானே இயக்கும் FSD மென்பொருள் உற்பத்தியைப் பற்றி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த கேள்விகளுக்கு சமூக ஊடகங்கள் மூலம் பதில் அளித்த எலன் மஸ்க், சீன மக்களுக்கு விரைவில் FSD மென்பொருள் கிடைக்கும் என்று கூறியுள்ளார்