பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை சென்றுள்ள ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி, அம்பாந்தோட்டையில், சுமார் நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நீர்மின் நிலையத்தை தொடங்கி வைத்தார்.
ஈரான் வழங்கும் நிதியுதவி மூலம் இந்த நீர்மின் நிலையம் கட்டப்பட இருந்த நிலையில், அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையால் ஈரான் அரசால் 400 கோடி ரூபாய்க்கு மேல் அனுப்ப முடியாமல்போனது.
பின், இலங்கை அரசு சொந்த நிதி மூலம் கட்டுமானப் பணிகளை முடித்தது.
இதன் மூலம் ஆண்டுக்கு 290 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார்.