தென் சென்னை தொகுதிக்குட்பட்ட கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில், தேர்தல் ஆணைய அனுமதி அடையாள அட்டையுடன் செய்தி எடுக்கச் சென்ற ஊடகத்தினரை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தியதோடு கேமராவையும் பிடித்து தள்ளினர்.
பின்னர் காவல் துறை உயர் அதிகாரிகள் அங்கிருந்த ஆய்வாளரை தொடர்பு கொண்டு அனுமதி அட்டை உள்ள ஊடகத்தினரை தடுக்கக் கூடாது என அறிவுறுத்தினர்.