புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட சுசீலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
முன்னாள் அமைச்சர் கண்ணனின் மகன் விக்னேஷ் கண்ணன் காங்கிரஸ் கட்சி துண்டை அணிந்து வந்ததற்கு பா.ஜ.க முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இருதரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.