1.9 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கச்சத்தீவைத் தந்து 6 லட்சம் இலங்கைத் தமிழர்களுக்கு புது வாழ்வு தந்தவர் இந்திரா காந்தி என எக்ஸ் தளத்தில் ப.சிதம்பரம் பதிவிட்டதற்கு தென்சென்னை பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவிலம்பாக்கத்தில் பரப்புரைக்கிடையே பேட்டியளித்த அவர், இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்ததற்கு உடந்தையாக இருந்த ப.சிதம்பரம் இப்படி பேசலாமா என கேள்வி எழுப்பினார்.