உலக மகிழ்ச்சி தினத்தில் வெளியிடப்பட்ட உலகளாவிய மகிழ்ச்சி நிறைந்த நாடுகளின் தரவரிசை பட்டியலில் அமெரிக்கா பின்தங்கியதற்கு இளைஞர்கள் மத்தியில் காணப்படும் கவலை, சோர்வு மற்றும் விரக்தியே காரணம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கான தரவரிசையில் பின்லாந்து முதலிடத்தை பிடித்த நிலையில், அமெரிக்கா 23வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
மாணவர்களின் கடன் சுமை மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய அவநம்பிக்கையும் அமெரிக்காவின் இந்த பின்னடைவுக்கு காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.