ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இந்தியாவிற்கான தலைவன் ஹரிஸ்ஃபரூக்கி மற்றும் அவனது கூட்டாளி ரெஹான் ஆகியோர் அசாமில் கைது செய்யப்பட்டனர்.
பங்களாதேஷில் பதுங்கியிருந்து பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்தல், நிதி திரட்டுதல் மற்றும் இந்தியாவில் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட திட்டமிட்டிருந்த அவர்கள் அசாமின் துப்ரு பகுதிக்கு வந்திருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருவரையும் கைது செய்தனர்.
தேடப்படும் நபர்களாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள இருவரையும் என்ஐஏவிடம் ஒப்படைக்க உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.