மென்பொருள் பிரச்சனை காரணமாக தென் கொரியாவில் ஹூண்டே மற்றும் அதன் துணை நிறுவனமான கியா தயாரிப்பில் விற்பனை செய்யப்பட்ட ஒரு லட்சத்து 70 ஆயிரம் மின்சார வாகனங்களை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
சார்ஜர் யூனிட்களில் உள்ள மென்பொருளில் ஏற்பட்ட பழுது காரணமாக வாகனங்கள் நடுவழியிலே நின்றுவிடுவதாக உரிமையாளர்கள் புகார் தெரிவித்ததை அடுத்து, ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் அந்நடவடிக்கையை எடுத்துள்ளன.