ரஷ்யாவின் ராணுவ சரக்கு விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. அதில் 15 பேர் பயணித்த நிலையில் அவர்கள் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் எஞ்சினில் தீப்பிடித்தது. உக்ரைன் எல்லையில் இருந்து 700 கிலோமீட்டர் தூரத்தில் இவானோவோ எனுமிடத்தில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விமானத்தை கரும்புகை சூழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.