அமெரிக்காவின் ஒஹியோவில் இறந்த நபரின் உடலை காரின் முன்சீட்டில் அமர வைத்து வங்கிக்கு சென்று அவரது கணக்கில் இருந்து பணத்தை திருடிய இரண்டு பெண்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வங்கி ஊழியர்களிடம் விசாரித்ததில், 80 வயது டக்ளஸ் லேமேன் என்ற வாடிக்கையாளரை இதற்கு முன்பும்கூட உடல்நலமில்லை எனக்கூறி காரில் அமர வைத்து, சலானில் அவரது கைரேகை பெற்று கரேன் காஸ்பெம், லோரின் டி பெரலா என்ற பெண்கள் பணம் எடுத்திருப்பதாக கூறினர்.
அதனால் டக்ளஸ் இறந்ததை அறியாமல் இந்த முறையும் பணம் எடுக்க அனுமதித்ததாக தெரிவித்தனர். டக்ளசுடன் வசித்து வந்த இருபெண்களும், அவர் இறந்ததால் அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்த பின்னர், வழியில் உள்ள மருத்துவமனையில் உடலை கிடத்தி விட்டு வெளியேறி விட்டது விசாரணையில் தெரிய வந்தது.