தேர்தல் பத்திரம் குறித்த விபரங்களை ஒரே கிளிக்கில் எஸ்.பி.ஐ வங்கியால் தொகுத்து வழங்கமுடியும் என எதிர்க்கட்சியினர் கூறிவரும் நிலையில், அது அவ்வளவு எளிதான காரியமில்லை என அத்திட்டத்தை வடிவமைத்த முன்னாள் நிதித்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பத்திரங்களை எந்த தேதியில், எவ்வளவு தொகை, யார் வாங்கியது உள்ளிட்ட விபரங்கள் பாரத ஸ்டேட் வங்கியிடம் இருந்தாலும் யார் அவற்றை பணமாக்கினார்கள் என்ற விவரத்தை பொருத்திப் பார்ப்பது சாத்தியமல்ல என்று கூறியுள்ள சுபாஷ் சந்திர கார்க், உச்சநீதிமன்றம் கேட்டுள்ள விவரங்களை வழங்க ஜூன் 30 வரை பாரத ஸ்டேட் வங்கி அவகாசம் கேட்டுள்ளதே வெறும் சாக்குபோக்குதான் என்றும் விமர்சித்துள்ளார்.