குண்டு வெடித்து 8 நாட்கள் கடந்த நிலையில் தேசிய கீதம் பாடி பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே மீண்டும் திறக்கப்பட்டது.
இதையொட்டி கஃபேவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
ஆதரவு தெரிவிக்க வந்த வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.
அவர்களிடம் சோதனை நடத்தப்பட்டு பின்னர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
வருங்காலத்தில் மோசமான சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்கும் வகையில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ள கஃபேயின் இணை உரிமையாளரான ராகவேந்திர ராவ், முன்னாள் ராணுவத்தினர் அடங்கிய குழுவை கொண்டு தங்கள் பாதுகாவலர்களுக்கு பயிற்சி அளிக்கவும் முயற்சித்து வருவதாக தெரிவித்தார்.