அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து சக்கரம் ஒன்று கழன்று விழுந்தது.
விமான நிலைய கார் பார்க்கிங்கில் விழுந்த ராட்சத சக்கரத்தால் கார் ஒன்று சேதமடைந்தது. 235 பயணிகளுடன் ஜப்பானுக்கு செல்ல இருந்த போயிங் பி 777-200 ரக விமானம், லாஸ் ஏஞ்சல்ஸில் பாதுகாப்பாக தரை இறக்கப்பட்டு பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ்வகை விமானத்தின் இரண்டு முக்கிய லேண்டிங் கியர்களுடனும் தலா 6 சக்கரங்கள் இணைக்கப்பட்டிருப்பதால், ஒரு டயர் சேதம் அடைந்தாலோ அல்லது கழன்று விழுந்தாலோ எவ்வித பாதிப்பும் நேராது என அதிகாரிகள் தெரிவித்தனர்.