சென்னை எம்.ஓ.பி. வைஷ்னவ் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செளமியா அன்புமணி, தனிப்பட்ட விசயங்களை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என மாணவிகளிடம் கேட்டுக்கொண்டார்.
புதுச்சேரி சிறுமி படுகொலை சம்பவம் மனதை உலுக்கியதாக தெரிவித்த அவர், பெண்கள் கண்டிப்பாக தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.