மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று இரவு வெளியாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இதில், உள்துறை அமைச்சர் அமித்ஷா,பாஜக தேசிய தலைவர் ஜெ.பி . நாட்டா உள்ளிட்டோர் பங்கேற்று, மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்றும், அதில், மோடி, அமித்ஷா போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்படலாம் என்றும் தெரியவந்துள்ளது.