மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த திரிணாமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷாஜஹான் கைது செய்யப்பட்டார்.
பல பெண்களை பலாத்காரம் செய்ததாகவும், நில மோசடியில் ஈடுபட்டதாகவும் ஷாஜஹான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து கடந்த 55 நாட்களாக அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் சவுத் 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள சர்பீரியா என்ற இடத்தில் பதுங்கியிருந்த ஷாஜஹானை மேற்கு வங்கப் போலீசார் கைது செய்தனர்.