விமான நிலையத்தில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் டாக்ஸி ஓட்டுநரை தரக்குறைவாக பேசியதாகக் கூறி கால்டாக்ஸி ஓட்டுநர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓட்டுநர் ஒருவர் தனக்கு நேர்ந்ததை தங்களுக்கான வாட்ஸ் அப் குழுவில் பதிவிட்டதைத் தொடர்ந்து மற்ற ஓட்டுநர்கள் தங்களது வாகனத்தை ஆங்காங்கே நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.