இமாச்சலப்பிரதேச முதலமைச்சராக சுக்விந்தர் சிங் மீது 26 எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருப்பதால் அம்மாநில காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்களும், 3 சுயேட்சை எம்எல்ஏக்களும் கட்சி மாறி வாக்களித்ததால் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் முதலமைச்சர் சுக்விந்தர் மீது 26 எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருப்பதால் அவரை மாற்ற வேண்டும் என அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.