ரஷ்யா மீது 500 பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடுத்த யுத்தம் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ரஷ்யாவின் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அலெக்சி நவல்னி சிறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நவல்னியின் சிறைத்தண்டனைக்கு காரணமாக இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தனிநபர்களுக்குப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பல்வேறு ரஷ்யாவின் நிதி ஆதார அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் அதிகார வரம்பு மீறலுக்கு உள்நாட்டிலும் வெளியிலும் புதின் விலையைக்கொடுத்தே ஆக வேண்டும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.