18 வயதுக்கு மேற்பட்டோர் கஞ்சா பயன்படுத்துவது குற்றமல்ல என ஜெர்மனி நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அங்கு சுமார் 45 லட்சம் பேர் கஞ்சா பயன்படுத்திவரும் நிலையில், கள்ளச்சந்தையில், விற்கப்படும் தரமற்ற கஞ்சாவால் மூளை கடுமையாக பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கள்ளச்சந்தையில் கஞ்சா விற்கப்படுவதை தடுக்க இந்த புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி ஒருவர் 25 கிராம் வரை கஞ்சா வைத்திருக்கவும், வீட்டில் 3 கஞ்சா செடிகள் வரை வளர்க்கவும் அனுமதி அளிக்கபடுகிறது.