2004ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை மீண்டும் தேர்வு செய்யப்பட்ட 23 எம்பிக்களில் 12 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஆகிய அமைப்புகள் நடத்திய ஆய்வில், 12 பேரில் ஒன்பது பேர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் கொள்ளை போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 எம்பிக்களில் பாஜகவைச் சேர்ந்த 7 பேர் மீதும், காங்கிரசைச் சேர்ந்த 3 பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
எம்பிக்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகவும் அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.