காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹுவிடம் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தொலைபேசி வாயிலாக தெரிவித்தார்.
காஸா போரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு உள்ளதாக கடிந்துகொண்ட மேக்ரான், பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிப்பதன் மூலமே பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என வலியுறுத்தினார்.
14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரஃபா நகரில் தஞ்சமடைந்துள்ள நிலையில், அங்கு தாக்குதல் நடத்தினால் மேலும் பல ஆயிரம் பேர் இறக்கக்கூடும் என்பதால் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளன.