மத்திய அரசுடன் விவசாய சங்கப்பிரதிநிதிகள் இன்று 3வது சுற்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
வேளாண் பொருட்களின் ஆதார விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் விவசாயிகள் டிராக்டர்களில் திரண்டு வந்தனர் அவர்கள் போலீசாரால் தடுப்புகள் போடப்பட்டு டெல்லி எல்லையான சிங்குவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகளைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை வீசியதில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் காயம் அடைந்துள்ளனர்
இச் சூழ்நிலையில், சுமுகத்தீர்வு காண மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது.
இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ள இருப்பதாக விவசாய சங்கப்பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.