பிரதமர் மோடி இன்று கத்தாரில் அந்நாட்டு மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அலி உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். கத்தார் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினரால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக அபுதாபியில் மிகப்பிரம்மாண்டமான சுவாமி நாராயணன் கோவிலை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
இந்த விழாவில் நடிகர் அக்சய்குமார், பாடகர் சங்கர் மகாதேவன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்துக் கோவில் மூலம் 140 கோடி இந்தியர்களின் உள்ளங்களை தமது நண்பர் அமீரக அதிபர் சைப் பின் ஜாயத் வென்றுள்ளதாக மோடி பாராட்டுத் தெரிவித்தார். இந்தியா பன்முகத்தன்மையில் ஒற்றுமை காணும் நாடு என்றும் பிரதமர் மோடி கூறினார்..