பெருவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த பெண் ஒருவரை, போலீசார் டெடி பியர் போல் வேடமிட்டு கைது செய்தனர்.
தலைநகர் லிமாவில் உள்ள ஒரு வீட்டில் வசித்துவரும் தாயாரும், மகளும் போதைப்பொருள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
காதலர் தினத்தன்று, டெடி பியர் வேடத்தில், கையில் இதய வடிவிலான பலூனுடன் வீட்டு வாசலில் காத்திருந்த காவலர் ஒருவர், அந்த பெண் ஆச்சரியத்துடன் அவரை நோக்கி வந்தபோது திடீரென அவரை கீழே தள்ளிவிட்டு கைது செய்தார்.
அருகே மாறு வேடத்தில் காத்திருந்த மற்ற போலீசார் வீட்டிற்குள் புகுந்து தாயாரையும் கைது செய்தனர். அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.