பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடித்தது.
இம்ரான்கான் ஆதரவு வேட்பாளர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமரப் போவதாக அறிவித்த நிலையில், நவாஸ் ஷெரீப்பும் பிலாவல் பூட்டோவும் கூட்டணி அரசு அமைக்கத் திட்டமிட்டனர். இதில் பிரதமர் பதவி யாருக்கு என்று நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ இடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
இதையடுத்து, நவாஸ் ஷெரீப் தரப்புக்கு வெளியில் இருந்து ஆதரவளிப்பதாக பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி அறிவித்துள்ளது. நவாஸ் ஷெரீப் பிரதமராவார் எனக் கருதப்பட்ட நிலையில், ஷெபாஸ் ஷெரீப்பை பிரதமராக அவர் பரிந்துரைத்துள்ளார்.