ஸ்வீடனின் கோதன்பர்க் நகரில் புதிதாக திறக்கப்பட இருந்த கேளிக்கை பூங்காவில் ஏற்பட்ட தீவிபத்தில் 16 பேர் காயம் அடைந்த நிலையில், மாயமான ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
லிஸ்பெர்க் கேளிக்கை பூங்காவின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியான ஓசியானா பூங்காவின் தெற்குப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
அப்போது பணிகளை மேற்கொண்டிருந்த 16 பேருக்கு சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்ட நிலையில், மாயமான துணை ஒப்பந்ததாரர் தீயில் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.