மெக்ஸிகோவின் சொனோரா மாநிலத்தில் செயல்பட்டுவந்த மிகப்பெரிய போதைப் பொருள் உற்பத்தி மையத்தை அந்நாட்டு ஆயுதப் படையினர் அழித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த மையத்தில் இருந்து சுமார் 4 மெட்ரிக் டன் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
போதைப் பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட 72 இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் நிர்ப்பந்தம் காரணமாக, நாடு முழுவதும் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்கும் தீவிர நடவடிக்கைகளில் மெக்ஸிகோ அரசு ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.