பிலிப்பைன்ஸ் நாட்டில் தென் பகுதியில் உள்ள மாகோ நகரில் நிலச்சரிவில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இரண்டு குழந்தைகள் 60 மணி நேரத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டன.
தங்கச் சுரங்கத்துக்கு பெயர் பெற்ற அந்த ஊரில் கடந்த 6 ஆம் தேதி இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வீடுகளும் 2 பேருந்துகளும் மண்ணில் புதைந்தன.
அவற்றுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள செஞ்சிலுவை சங்கத்தினரும் இரண்டு மாத குழந்தை ஒன்றையும், 3 வயது பெண் குழந்தையையும் உயிருடன் மீட்டனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.