மும்பையில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் வானில் பறந்து கொண்டிருந்த போது கழிவறைக்குள் சிக்கிய ஆண் பயணி 2 மணி நேரத்துக்குப் பின் மீட்கப்பட்டார்.
கழிவறைக் கதவின் தாழ்ப்பாளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவரால் வெளியே வர இயலவில்லை என கூறப்படுகிறது.
அதிகாலை 4 மணி அளவில் விமானம் தரையிறங்கியதும் தாழ்ப்பாளை உடைத்து பயணியை மீட்டதாக பெங்களூரு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயணியின் விமானக் கட்டணத்தை திருப்பித் தருவதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.