நேர்மையான பேச்சுவார்த்தை, உண்மையான அரசு முறை பேச்சுவார்த்தைகளால் உக்ரைன் , காசா பிரச்சினைகளுக்கு அமைதித் தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
போர் மூண்ட பகுதிகளில் மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் இந்தியாடுடே பத்திரிகைக்கு மோடி அளித்த பேட்டியில், உக்ரைன் ஆனாலும் சரி காசா ஆனாலும் சரி, வன்முறையாளர்களும் தீவிரவாதிகளும் ஆதிக்கம் செலுத்துவதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.